சென்னை: குறும்பட இயக்குனர் அருண் குமார் பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் எடுத்துள்ள படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.
காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர்கள் பெரிய திரையில் படம் எடுப்பது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் அருண் குமார். அவர் குறும்படத்தை தழுவி பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.
படத் தலைப்பை பார்த்து பண்ணையாருக்கும் பத்மினி என்ற பெண்ணுக்கும் இடையே நடக்கும் விஷயங்களைப் பற்றி கூறப் போகிறார்களோ என்று தவறாக நினைக்க வேண்டாம். ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்கள். உண்மையில் படத்தில் வரும் வயதான பண்ணையாருக்கு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பிரீமியர் பத்மினி கார் என்றால் உயிர். இதைத் தான் தலைப்பில் அப்படி கூறியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்ப பண்ணையாரும் பத்மினியும் வருகிறது அடுத்து ஜமீந்தாரும் ஷெவர்லேவும் வரலாம். பத்மினி என்றதும் பெண்ணோ என்று நினைக்கத் தோன்றியதல்லவா பிளேன்முத்து என்றால் உங்களுக்கு என்ற தோன்றுகிறது. மதுரைக்காரங்கள கேளுங்க. பிளைமவுத் காரைத் தான் ஒரு காலத்தில் அவ்வளவு அழகாக அழைத்துள்ளனர்.
Post a Comment