சென்னை: கமல் ஹாசன் ஒரு பைத்தியம் என்று இயக்குனர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா கூறுகையில்,
கமல் தன்னையே அர்ப்பணித்து, ஆய்வு செய்து, கடுமையாக உழைத்து படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும். கமலுக்கு பைத்தியம் சினிமா மீது பைத்தியம். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது. விஸ்வரூபத்தை பார்த்த பிறகு கமல் ஒரு தமிழன், என் நண்பன், என்னைப் போன்றே சினிமாவை நேசிப்பவன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. கமலை உலக நாயகன் என்று அழைக்காமல் உலக இயக்குனர் என்றே அழைக்க வேண்டும்.
விஸ்வரூபம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விஸ்வரூபம் சந்தித்த பிரச்சனைகளால் ரசகிரக்ளின் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே தான் கூற வேண்டும். கமலின் கடின உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment