சென்னை: விஸ்வரூபம் குறித்து இன்று கமல் ஹாசன் அளித்த பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விஸ்வரூபம் பற்றியும், அதற்கு தமிழக அரசு விதித்த தடை பற்றியும் உருக்கமாக பேட்டியளித்தார். தனக்கு மதமும் இல்லை, குலமும் இல்லை தற்போது பணமும் இல்லை என்றார். தன்னுடைய ரசிகர்களில் ஏராளமானோர் முஸ்லிம்கள் என்றும், யார் மனதையும் புண்படுத்த படம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன் என்றார்.
இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில்,
கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கினேன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனையை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய இத்தனை ஆண்டு கலைசேவையில் அவர் இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர். அவருக்கா இப்படி ஒரு சோதனை. கமல் சார் எங்கும் போகக் கூடாது அவர் இங்கு தான் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கமல் சார் உங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது என்றார்.
Post a Comment