எக்கச்சக்க ஆபாச கமெண்டுகள் வருவதால் இனி ட்விட்டர் தளத்தில் தொடரப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறிவிட்டார் ஸ்ரேயா.
நடிகை ஸ்ரேயா ட்விட்டரில் தனது படங்கள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். ஆனால் அவருக்கு ரசிகர்களிடமிருந்து ஆபாச கமெண்டுகள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன.
அவரால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை போய்விட்டது. இதுகுறித்து ஸ்ரேயா எழுதியுள்ள கடைசி ட்வீட்டில், "முட்டாள், பைத்தியக்காரர்கள் கண்ட கண்ட குப்பைகளை இங்கே கொட்டி வைக்கிறார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக ட்விட்டருக்கு பல இளம் நடிகைகள் குட்பை சொல்லி வருகின்றனர். ஸ்வாதி, நந்தினி, இஷா போன்றவர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.
ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ட்வீட்டிக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment