ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில், கரகாட்டம், கிராமியப் பாடல்கள் என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டப் போகின்றன.
பொங்கலை முன்னிட்டு பல்வேறு தொலைக்காட்சிகளும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளாக புலவர். மா. ராமலிங்கம் தலைமையில் மானுடம் மேம்படபெரிதும் உதவுவது அருளா? பொருளா? என்ற தலைப்பில் சிந்திக்கவைக்கும் பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
காரியாபட்டி இசைகுழுவினரின் மனதைமயக்கும் கிராமியபாடல்களும், கரகாட்டமும் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பாகிறது.
இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான. மாணிக்கவினயாகத்தின் சிறப்புபேட்டியும் ஒளிபரப்பாக இருக்கிறது.
பொங்கலன்று நேரடி விளையாட்டுப் போட்டியும், சிறப்புப் பரிசுகளும் வழங்க உள்ளது சங்கரா டிவி.
Post a Comment