அலெக்ஸ் பாண்டியன்- கார்த்திக்கு இன்னொரு சிறுத்தையா அல்லது சகுனியா?'

|

பொங்கல் படங்களில் முதல் வெளியீடாக இன்று காலை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது கார்த்தி - அனுஷ்கா நடித்த அலெக்ஸ் பாண்டியன்.

சுராஜ் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள படம் இது.

உண்மையில் இந்தப் படம் நாளைதான் வெளியாகவிருந்தது. ஆனால் விஸ்வரூபம் தள்ளிப் போனதாலும், நல்ல தியேட்டர்கள் கிடைத்ததாலும் ஒரு நாள் முன்பாக இன்றே வெளியாகிவிட்டது.

is alex pandian another saguni
மொத்தம் 440 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது, தமிழகத்தில் மட்டும். பல தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகள் களைகட்டிவிட்டன.

பொங்கலுக்கு வரவிருக்கும் 5 படங்களில் நிச்சய வெற்றி என்று சொல்லப்பட்டு வந்த இந்த அலெக்ஸ் பாண்டியன் எப்படியிருக்கிறது?

இன்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

சிலர் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் உட்கார முடியவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.

இன்னும் சிலர், பரவாயில்லை, பண்டிகை நாளில் ஜாலியாகப் பார்க்க சிறந்த படம் என அலெக்ஸ் பாண்டியனைக் குறிப்பிட்டுள்ளனர்.

படம் மொத்தம் 2.45 மணிநேரம் ஓடுவதால், இரண்டாம் பாதி இழுவையாக இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி கலவையான கருத்துகள் வந்தாலும், வசூலுக்கு குறைவில்லை. படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் பட்டையைக் கிளப்புகிறது.

அலெக்ஸ் பாண்டியன் கார்த்திக்கு இன்னொரு சிறுத்தையா? அல்லது சகுனியா.. நாளை பார்ப்போம்.. அதுவரை உங்கள் படம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதியலாமே!

 

Post a Comment