ஹைதராபாத்: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் இன்று ஹைதராபாதில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் படம் ரிலீசாகவில்லை. பிற இடங்களில் படம் திரையிடப்பட்டுள்ளது. ஹைதராதாத்தில் விஸ்வரூபம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஒரு தியேட்டரில் கன்னடப் படமான தண்டுபால்யா போடப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திராவின் பிற பகுதிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை, முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் நாள். மீலாடி நபி விழா வேறு. எனவே படத்தை ஹைதராபாத்தில் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தியேட்டரும் திரையிடவில்லை என்று கூறப்படுகிறது. நாளை வெளியாகுமா என்றும் தெரியவில்லை. அதே நேரத்தில் குண்டூர், சித்தூர் உள்ளிட்ட பல ஆந்திர மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம் படத்தை தமிழகம், புதுவையில் முழுமையாக தடை செய்துள்ளன மாநில அரசுகள். கர்நாடகத்திலும் சட்டம் ஒழுங்கு காரணமாக படத்தைத் திரையிடவில்லை.
Post a Comment