சர்ச்சைக்கு பெயர்போன கவர்ச்சி நடிகை சோனா, இயக்குநராகிவிட்டார். தான் இயக்கும் முதல் படத்துக்கு தேவ் என்று தலைப்பு வைத்துள்ளார்.
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வையாபுரி டாவடிக்கும் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் சோனா. அதன் பிறகு தெலுங்கில் 25 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானார்.
மீண்டும் தமிழுக்கு வந்து, மிருகம், குசேலன், அழகர்மலை படங்கள் மூலம் பிஸியானார்.
ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் என்ற கடையை நடத்திய சோனா, படத் தயாரிப்பிலும் இறங்கினார். யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பட விநியோகத்திலும் இறங்கினார்.
இப்போது, இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு திரைப்படக் கல்லூரியில் முறையாக பயிற்சி பெற்றுள்ள சோனா, முதல் படத்துக்கு தேவ் என்று பெயரிட்டுள்ளார்.
நாயகனாக தேவ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Post a Comment