ஜெயா டிவி வசமானது ரஜினியின் கோச்சடையான்!

|

Kochadaiyaan Satellite Rights Sold To Jaya Tv

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி கைப்பற்றியுள்ளது.

இப்போதெல்லாம் திரைப்படம் பூஜை போடும் போதே அதன் சேட்டிலைட் உரிமையை யார் கைப்பற்றுவது என்பதில்தான் பலத்த போட்டி நிலவுகிறது. சன்டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி புதிதாக வேந்தன் டிவி வேறு களத்தில் இறங்கியுள்ளது.

புதிய திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை பெறுவதில் போட்டி போடும் சேனல்கள் பல கோடி கொடுத்து புதுப்பட உரிமையை வாங்கி விடுமுறை நாட்களில் ஒளிபரப்புகின்றனர். அப்பொழுதுதானே அதிக அளவில் விளம்பரதாரர்களை கவரமுடியும். இதற்காகவே தொலைக்காட்சிகள் தற்போது சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது வேறு கதை.

ரஜினி, கமல் படங்களை கைப்பற்றுவதில் கடந்த ஆட்சி காலத்தில் சன்டிவி, கலைஞர் டிவிதான், லீடிங்கில் இருந்தன. அதிமுக ஆட்சி வந்த உடன் கமல், ரஜினி படங்களை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது ஜெயா டிவி.

கமலின் ‘விஸ்வரூபம்' திரைப்படம் ஜெயாடிவியின் கைவசம் ஆனதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஏப்ரலில் வெளியாகும் ‘கோச்சடையான்' திரைப்படம் ஜெயா டிவியின் வசமாகியுள்ளதாம்.

 

Post a Comment