சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு எப்பொழுதுமே பிடித்த ஹீரோ அஜீத் குமார் தானாம்.
நடிகை த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார் என்று அவரிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் ஹீரோ எனக்கு பிடிக்கும். உதாரணமாக சமர் படத்தில் நடித்தபோது விஷாலின் நடிப்பு பிடித்திருந்தது. ஆனால் எப்பொழுதுமே பிடித்த ஹீரோ என்றால் அது அஜீத் குமார் தான். நிஜ வாழ்க்கையில் அவரது நடவடிக்கைகளைப் பார்த்து வியப்பவள் நான் என்றார்.
ஜி, கிரீடம், மங்காத்தா என்று 3 படங்களில் த்ரிஷா அஜீத் ஜோடியாக நடித்துள்ளார். அவர் விஜய்க்கு மட்டுமல்ல அஜீத்துக்கும் ஏற்ற ஜோடியாாக உள்ளார்.
த்ரிஷாவும் விஜயும் நல்ல நண்பர்கள் என்றெல்லாம் கூறினார்களே. அவரைப் பற்றி த்ரிஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு எப்பொழுதுமே பிடித்தவர் அஜீத் என்று அவர் சொன்னதைக் கேட்டு விஜய் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறாரோ.
Post a Comment