சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு பவர் ஸ்டார் சீனிவாசன் மறுபடியும் சந்தானத்துடன் சேர்ந்து நடிக்கிறார்.
இத்தனை நாட்களாக பவர் ஸ்டார் என்றால் காமெடி பீஸ் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தனர். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப் பார்த்துவிட்டு பவர் ஸ்டார் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. தியேட்டர்களில் பவர் ஸ்டார் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த படத்தின் வெற்றியையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிவா, சந்தானம், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்து வரும் யா யா படத்தில் பவர் ஸ்டாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவா, சந்தானம் கூட்டணியே பட்டைய கிளப்பும் இதில் பவர் ஸ்டார் வேறு, சொல்லவா வேண்டும் காமெடிக்கு. படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நம்மை சிரிக்க வைக்க உள்ளனர்.
வயிறு குலுங்கச் சிரிக்க தயாராகுங்கள் ரசிகர்களே. யா யா நிச்சயம் ஹிட்டாகும் என்பது தற்போதே தெரிந்துவிட்டது.
Post a Comment