துப்பாக்கி படத்துக்கு 'ஏ' சான்று தர பரிசீலியுங்கள் - சென்சார் போர்டுக்கு ஹைகோர்ட் பரிந்துரை

|

Hc Recommends A Certificate Thuppakki   

சென்னை: துப்பாக்கியில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டாலும், அந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் தருவது குறித்து சென்சார் போர்டு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறின.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அரசு உத்தவிட்டது. சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் ஓடிக்கொண்டுள்ளது.

ஆனாலும், இந்தப் படத்துக்கு ஏ சான்று கொடுக்க வேண்டும் என இந்திய தேசிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அப்துல்ரகீம் உயர் நீதிமன்றத்தி்ல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய மேலும் சில காட்சிகளை கைப்பற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அந்த படத்துக்கு 'யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறு. அந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர், துப்பாக்கி படத்தை சமீபத்தில் நேரில் பார்த்தனர். இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவி்த்திருந்தனர்.

அதில் துப்பாக்கி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை தமிழக அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் இந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுப்பது குறித்து மார்ச் மாதம் இறுதிக்குள் மத்திய தணிக்கை குழு பரிசீலனை செய்ய வேண்டும், என்று நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

 

Post a Comment