சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல.
இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த கமல், அண்டா அண்டாவாக பிரியாணி தயாரிக்க தயாராக இருங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் 24 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு விஸ்வரூபத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ கே முகமது ஹனீபா கூறுகையில், "இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் எப்போதுமே தவறாக சித்தரிப்பது கமல் வழக்கம். விஸ்வரூபத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.
எனவே அந்தப் படத்தை டிடிஎச், திரையரங்குகளில் வெளியிடும் முன்பு எங்களுக்கு கமல் காட்டியே தீர வேண்டும். ஆட்சேபணைக்குரிய காட்சிகளிருந்தால் நீக்கிவிட வேண்டும். அப்படி எதுவும் இல்லாவிட்டால் கமலைப் பாராட்டும் முதல் அமைப்பு எங்களுடையதுதான்," என்றார்.
+ comments + 1 comments
If u want see the movie Please pay 1000 and watch it through DTH instead of creating tproblems to movie and watching the movie at free of cost and if you cant able to pay 1000 wait and watch on 11th.. Dont create such kind of non sense things in the way of islam....
Post a Comment