பொங்கலுக்கு வெளியான சமர் படத்தை, முடக்க கடைசி நிமிடம் வரை சதிகள் நடந்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து வென்றதாகவும் விஷால் தெரிவித்தார்.
விஷால், திரிஷா ஜோடியாக நடித்த 'சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குநர் திரு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
விஷால் கூறுகையில், "சமர் படத்துக்கு பூஜை போட்டதிலிருந்து படத்தை முடித்து தேங்காய் உடைத்து ரிலீசுக்கு கொண்டு வருவதுவரை நிறைய பிரச்சினைகள், தடங்கல்கள் தொடர்ந்தன. இந்தப் படத்தை வர விடாமல் நிறுத்த சிலர் முயற்சித்தனர். திரைமறைவிலேயே அவர்கள் தீவிர வேலை செய்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த படம் ஒரு புது முயற்சி, எப்போது வந்தாலும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிஜமாகியுள்ளது. படம் ஹிட்டாகி இருக்கிறது. தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. படம் வராது என்று பலர் கூறினார்கள். அதை மீறி வந்து ஜெயித்து விட்டது. இதற்கு காரணம் நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள்தான்.
25-ந்தேதி தெலுங்கிலும் இப்படம் வருகிறது. திரு இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
த்ரிஷாவுடன் நடித்த முதல் படமே நல்ல பெயரையும் வெற்றியையும் தட்டிச் சென்றுள்ளது மகிழ்ச்சி," என்றார்.
பொங்கல் விடுமுறை முடியும் தறுவாயில் இந்தப் படத்துக்கு மேலும் 60 தியேட்டர்கள் கிடைத்துள்ளனவாம்.
Post a Comment