மேலே நீங்கள் படிக்கும் தலைப்புதான் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் போஸடர்களாக, வினைல் பேனர்களாக, கட் அவுட்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.
பிறந்த நாள் விழா, ப சிதம்பரம் புத்தக வெளியீடு, சோவின் துக்ளக் நிகழ்ச்சி போன்றவற்றில் ரஜினி அரசியல் பற்றி பேசியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனிவழியாகத்தான் இருக்கும் என்று வெளிப்படையாகக் கூறினார் ரஜினி. மேலும் தனது ரசிகர்களை அழைத்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தனது பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் நடத்த வள்ளுவர் கோட்டத்தை கேட்டபோது, ஆரம்பத்தில் தருவதாகக கூறி முன்பணமும் பெற்றுக் கொண்ட அரசு, பின்னர் திடீரென்று அதை ரத்து செய்ததும், கடைசி வரை இடம் தராமல் அலைக்கழித்ததும் ரஜினிக்கு கடும் அதிருப்தியை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் கேட்டுவரும் அரசியல் பிரவேசம் குறித்து அவர் இறுதி முடிவு எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ரசிகர்கள் மாவட்டந்தோறும் ரஜினயின் அரசியல் பிரவேசம் குறித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் தலைவா நீ வந்தா செலக்ஷன், நோ எலெக்ஷன் என்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பேற்படுத்தியிருந்தனர்.
இப்போது மாவட்டந்தோறும், அனைத்து முக்கிய நகரங்களில் இந்தப் போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.
ரஜினியும் இப்போது ரசிகர்களை இந்த விஷயத்தில் தடுக்கவில்லை. இந்த போஸ்டர் மற்றும் ரசிகர்கள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார்!
Post a Comment