சென்னை: ஆதிபகவன் படம் யாருக்கும் எதிரானதல்ல. இந்தப் படம் பிப்ரவரியில் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆதிபகவன்‘. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என சந்தேகிப்பதாகவும் எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் அன்பழகன் கூறுகையில், "ஆதிபகவன் ஒரு நேர்மையான பொழுதுபோக்குப் படம். மதக் காட்சிகள் எதுவும் இதில் இல்லை.
‘ஆதி பகவன்' என்பது கதையில் வரும் இரு கேரக்டர்கள் பெயர். திருக்குறளில் இடம் பெற்ற ‘ஆதிபகவன்' வார்த்தையையே படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த படம்.
இப்படத்தை முடக்க பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர். சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதிர்ப்பு கிளப்புகின்றனர். யார் யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகியுள்ளது," என்றார்.
கமல் கூட ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்!!
Post a Comment