பூஸ்ட் விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடராக தற்போது பிரபுதேவா நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின், ஷேவக், தோணி ஆகியோரின் கிரிக்கெட் ஆட்டத்தை புகழ்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் பிரபுதேவா.
கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமே விளம்பரத்தூதுவராக நியமிக்கப்பட்டு வந்த பூஸ்ட் பானத்திற்கு தற்போது தமிழ் திரை உலக மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா முதன் முறையாக நடனமாடியுள்ளார்.
சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டம், அவர்களுக்கு சச்சின், ஷேவாக், தோணி ஆகியோரின் சிறப்புக்களைக் கூறும் பாடலைப் பாடி செம ஆட்டம் போட்டுள்ளார் பிரபுதேவா. இந்த விளம்பரம் இணையதளங்களில் ஹிட் ஆகியுள்ளது.
Post a Comment