இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வகையில் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 23 படங்கள் வெளியாகின்றன. இதுவரை மூன்று படங்கள் வெளியான நிலையில், மேலும் 21படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.
கடந்த 1-ம் தேதி ‘கடல்', ‘டேவிட்', படங்கள் ரிலீசாகின. இன்று விஸ்வரூபம் படம் வெளியாகியுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை என்பதால், ஏற்கெனவே அறிவித்தபுடி ‘சுடச்சுட', ‘நினைவோடு கலந்துவிடு', ‘அறியாதவன் புரியாதவன்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.
வருகிற 14-ந்தேதி விமல், ஒவியா ஜோடியாக நடத்த 'சில்லுன்னு ஒரு சந்திப்பு', வீரப்பனைப் பற்றிய பரபரப்பு படமான வனயுத்தம், பேய்ப்படம் நான்காம் பிறை மற்றும் ‘நேசம் நெசப்படுதே' ஆகியவை வெளியாகின்றன.
வருகிற 15-ந் தேதி பிரபுதேவாவின் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' படம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில படங்களும் அன்றைக்கு வெளியாகக் கூடும்.
பிப்ரவரி 22-ந்தேதி அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்', விமல், சிவகார்த்திகேயன் நடத்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', சினேகா நடித்த ‘ஹரிதாஸ்', தருண்கோபி நடித்த ‘பேச்சியக்கா மருமகன்', தலக்கோணம், கருணாஸ் நடித்த ‘சந்தமாமா' ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. இந்தப் பட்டியலில் பாலாவின் பரதேசியும் சேரப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது.
இவை தவிர, ‘கீரிப்புள்ள', ‘ஆண்டவ பெருமாள்', ‘கண்பேசும் வார்த்தைகள்', ‘சொன்னா புரியாது', ‘அர்ஜூனன் காதலி' போன்ற படங்களும் இம்மாதம் வருகின்றன. இவற்றின் ரிலீஸ் தேதி முன்னே பின்னே இருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment