400 திரையரங்குகளில் திருமதி தமிழ்... இது தேவயானி கணவரின் தில்லு!!

|

Devayani Release Thirumathi Tamil 400 Plus Theaters

இன்றைய கோலிவுட் ஹாட் செய்தி... தேவயானி கணவர் ராஜகுமாரனின் திருமதி தமிழ் படம்தான். இந்தப் படம், அதில் ராஜகுமாரனின் தோற்றம் குறித்து பலரும் கிண்டலாகப் பேசிவரும் சூழலில், அந்தப் படத்தை தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர் கணவனும் மனைவியும்.

தேவயானி சினிமாவை விட்டு டிவிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்த படம் காதலுடன். இயக்கியவர் அவரது கணவர் ராஜகுமாரன்தான். இந்தப் படத்தைத் தயாரித்த வகையில் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து, நிதி நெருக்கடியில் சிக்கினார் தேவயானி. அதன் பிறகு டிவியில் கவனம் செலுத்தினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.

கடன்களை எல்லாம் அடைத்த பிறகு, இப்போது மீண்டும் சினிமா தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளார் தேவயானி.

கணவர் ராஜகுமாரன்தான் இயக்குநர். ஹீரோவும் அவரே. பவர் ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சமூக வலைத்தளங்கள் கலாய்க்கும் அளவுக்கு எப்போதும் ஒரு இன்ச் மேக்கப், பழைய ரஜினி பட கவுபாய் காஸ்ட்யூம், ராமராஜனை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு லிப்ஸ்டிக், நடன அசைவுகள் என மீடியாவுக்கு சரியான தீனியாகிவிட்டார் ராஜகுமாரன்.

ஆனால் இதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. என் படம் வெளியானால் தமிழகமே அதிரும் அளவுக்கு பெரும் வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். படத்தில் அவருக்கு இரண்டு ஜோடி. ஒருவர் தேவயானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், இந்தப் படத்தில் ரெட்டை ஜடை, பாவாடை தாவணி என வருகிறார். இன்னொருவர் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கீர்த்தி சாவ்லா.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக 400 தியேட்டர்களில் வெளியிடப் போகிறதாம் தேவயானியின் ராதே பிலிம்ஸ்.

இது ரிஸ்க்குதான். ஆனால் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதால் இவ்வளவு பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறோம், என்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

கான்ஃபிடன்ஸ் பாஸ் கான்ஃபிடன்ஸ்!

 

Post a Comment