வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது.
மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது.
கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.
சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.
Post a Comment