மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.
ஏ.ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வாலை வைத்து எடுத்த படம் துப்பாக்கி. துப்பாக்கி ரிலீஸாகி நேற்றுடன் 100 நாட்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அங்கு விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
நம்ம விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடியை சம்பளமாக பேசியுள்ளனர். இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் மூவீஸ் தயாரிக்கிறது.
என்ன முருகதாஸ் அக்ஷய்க்கு ரூ.50 கோடி சம்பளமாமே என்று கேட்டதற்கு அப்படியா அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகருக்கும் இடையே உள்ள விஷயம். இதில் என் பங்கு எதுவும் இல்லை என்றார்.
Post a Comment