ராஜமவுலி படத்தில் பிரசாந்த் ஹீரோ!!

|

Rajamouli Direct Prashant

சென்னை: ஈ படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜமவுலி, நடிகர் பிரசாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

ஈ படத்துக்குப் பிறது இப்போது பாஹுபாலி என்ற தெலுங்குப் படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம் இது. மகேஷ் பாபு நாயகனாக நடிக்கிறார். டகுபதி ராணா பவர்புல் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் - தெலுங்கில் ஒரு பிரமாண்ட படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.

இந்தப் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். பொன்னர் சங்கர் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் இது.

இந்தப் புதிய படத்தில் பிரசாந்த் ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.

என்னடா... ரொம்ப நாளா பிரசாந்த்தை திரையில் பார்க்க முடியவில்லையே என கேட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்திதான்!

 

Post a Comment