காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அட்டாகாசம் கேம் ஷோவில் சின்னத்திரை காதல் ஜோடிகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய கேம் ஷோ, அட்டகாசம். பிரபல பின்னணிப் பாடகர் மனோ தொகுத்து வழங்கும் இந்த கேம்ஷோவில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று விளையாடி பரிசுகளை தட்டிச்செல்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு நட்சத்திர ஜோடிகளின் காதல் அனுபவங்களுடன் மலர்கிறது. சின்னத்திரை காதல் ஜோடிகள் ராஜ்கமல்-லதாராவ், அசார்-லக்ஷா கலந்து கொண்டு தங்கள் இனிய காதல் நாட்களை நினைவு கூர்கிறார்கள். அவர்களின் அட்டாகாசமான விளையாட்டுக்களும் இதில் அடங்கும்
இந்த நிகழ்ச்சியில் பாண்டு, பயில்வான் ரங்கநாதன், வையாபுரி, வெங்கட், சந்தானபாரதி, தேவிகிருபா என கலைப்பிரபலங்களும் பங்கேற்கிறார்கள்.
நான்கு சுற்றுக்களை கொண்ட இந்த கேம்ஷோவில் வெற்றி பெரும் ஒவ்வொரு சுற்றுக்கும் அதற்கேற்ப பணமாக பரிசளிக்கிறார் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட மனோ. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடலுடன் ஆடிக்கொண்டே அவர் என்ட்ரி கொடுப்பது கூட அட்டகாசமாகத்தான் இருக்கிறது.
Post a Comment