கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை!

|

Neerparavai Goes Korea

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை படம் கொரிய திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம், ‘நீர்ப்பறவை.' இந்த படத்தில் விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், திரைப்பட விழாக்களில் தவறாமல் இடம்பிடிக்கும் படமாக மாறியுள்ளது.

இந்த படம், தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலில் நடக்கும் 14-வது சர்வதேச திரைப்பட விழாவில், போட்டிப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.

ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை நடக்கும் இந்த படவிழாவில், இயக்குநர் சீனுராமசாமி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தென்கொரிய நாட்டின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொள்கிறார்கள்.

 

Post a Comment