இளையராஜாவுக்காக ஓடோடி வந்து பாட்டு பாடிய கமல்

|

Kamal Haasan Sings Ilayaraja

சென்னை: இளையராஜா இசையில் கமல் ஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார்.

பாலிவுட் இயக்குனர் பாவ்னா தல்வார் பங்கஜ் கபூரை வைத்து ஹாப்பி என்ற படத்தை எடுத்து வருகிறார். இதற்கு இசை அமைப்பவர் இசைஞானி இளையராஜா. இந்த படம் காலத்தால் மறையாத நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு சமர்ப்பனமாக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை பதிவு செய்ய ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார் இளையராஜா. திடீர் என்று தனது உதவியாளரை அழைத்து கமல் ஹாசனுக்கு ஒரு போனை போட்டு வரச் சொல்லுங்கள் என்றார்.

அவரும் போன் செய்ய ஒரு மணி நேரத்திற்குள் ஸ்டுடியோவுக்கு வந்தார் கமல். ஒன்னுமில்லை கமல் ஹாப்பி படத்திற்கு நீங்கள் ஒரு பாட்டு பாடினால் நல்லா இருக்கும் பாடுங்களேன் என்றார் இளையராஜா. கமலும் ஓகே பாடிட்டா போச்சு என்று பாட 30 நிமிடத்திற்குள் பாடல் பதிவு செய்யப்பட்டது. கமல் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கமல் கூறுகையில், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் மற்றும் இளையராஜா ஆகியோர் என்னுடைய முன்மாதிரிகள். அவர்கள் அழைத்தால் உடனே ஓடுவேன் என்றார்.

 

Post a Comment