நடிகையான புதிதில் எனக்கு இரண்டு பேருடன் தொடர்பு இருந்தது. ஆனால் நேரத்தைக் கொல்லும் விஷயமாக அது தெரிந்ததால், பின்னர் அவர்களிடமிருந்து விலகிவிட்டேன், என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலின் காதல் அனுபவங்கள் குறித்து கேட்டபோது, முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "மும்பையில் நட்பாக இருப்பதென்பது சாதாரண விஷயம். என்னுடன் நட்பாக இருப்பவர்களை பிடிக்கும். அதே நேரம் என்னிடத்தில் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன். அவர்கள் மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவேன்.
அந்த எல்லையை தாண்ட மாட்டேன். ஆண் நண்பர்களால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக அழுது இருக்கிறேன்.
எனக்கு இரண்டு பேரிடம் தீவிரமான நெருக்கம் இருந்தது. அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு முன்பு பழகினேன். இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது. இதனால் அதை முறித்துக்கொண்டு விலகி விட்டேன். நடிகையான பிறகு இன்னொருவரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்," என்றார்.
Post a Comment