இயக்கம், படத் தயாரிப்பு என இரட்டைக் குதிரைச் சவாரி இனி வேண்டாம்... படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று அறிவித்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன்.
சொன்னதோடு நிற்காமல், இதுவரை தான் பங்கு வகித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலிருந்து விலகிவந்துவிட்டார். இனி தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்றும், ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்வார் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தன் நண்பர் ஜான் மேக்ஸுடன் இணைந்து தொடங்கினார் பிரபு சாலமன்.
அந்த நிறுவனம் மூலம்தான் மைனாவை இயக்கினார். அடுத்து சாட்டை படத்தை இயக்கினார். இப்போது தயாரிப்பு வேண்டாம்... இயக்கம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில், "ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். இனி ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தில் இருப்பார். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடவிருக்கிறேன்," என்றார்.
Post a Comment