அனுஷ்கா அடுத்து நடிக்கும் சரித்திரப் படம் ராணி ருத்ரமாதேவி. இது ஒரு தெலுங்குப் படம். தமிழிலும் வெளியாகிறது.
படத்தின் சிறப்பு... இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு சிம்பொனி இசைக் குழுவை வைத்து பாடல் பதிவு செய்வதுதான்.
ராணி ‘ருத்ரமாதேவி'யின் வீர வாழ்க்கையை பதிவு செய்கிறார்களாம் இந்தப் படத்தில். ராணா, அஞ்சலி என முன்னணிக் கலைஞர்கள் நடிக்கின்றனர். தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் எதிரி மன்னர்களுடன் ருத்ரமாதேவி போரில் சண்டையிடும் காட்சிகள் நிறையவே உள்ளன. எனவே அந்த வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா முறையான வாள் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருவரை வைத்து அவருக்கு வாள் பயிற்சி அளிக்கிறார்கள். கத்திச் சண்டை, குதிரை சவாரியும் கற்கிறாராம் அனுஷ்கா.
தக்காண தேசத்தில் 1259-1289 ல் ஆட்சி செய்த காகதிய வம்ச ராணி ருத்ரமா தேவி. வீரமும் தியாகமும் காதலும் நிறைந்தது அவரது வாழ்க்கை. படத்தை இயக்குபவர் ஒரு தமிழர். பெயர் குணசேகர். தயாரிப்பாளரும் அவரே!
Post a Comment