மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!

|

Jayam Brother Together Again Ags

தில்லாலங்கிடி படத்துக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி இணைகின்றனர். இந்தப் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

தரமான படங்களைத் தரும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது 12-வது படைப்புக்காக மீண்டும் ஜெயம் ராஜா - ரவி கூட்டணியைப் பிடித்திருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஜெயம் ராஜா படம் இயக்குவது இது மூன்றாவது முறை. ஜெயம் ரவி நடிப்பது இரண்டாவது முறை.

ஏற்கெனவே ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம் படங்களை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் புதிய படத்துக்காக கடந்த ஆறு மாதங்களாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜெயம்ராஜா!

'ஜெயம்', ‘எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', ‘சந்தோஷ் சுப்ரமணியம்', ‘தில்லாலங்கடி' என இதுவரை ஜெயம் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், "சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்‌ஷன் படம். ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களில் மிக முக்கிய படமாக இது அமையும்", என்றார்.

 

Post a Comment