ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவை ஜோடியாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தயாரிப்பாளருமான நாகபாபுவின் மகன் வருண் தேஜ். சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு பட இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டலா தான் இயக்கும் கொல்லபாமா படத்தில் வருண் தேஜை ஹீரோவாக்கியுள்ளார். இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அக்ஷராவை நடிக்க வைக்க முயன்று மணிரத்னம் தோற்றுப்போனார் என்று கோலிவுட்டெல்லாம் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் வருணுடன் நடிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. அக்ஷரா தனது அக்கா ஸ்ருதியைப் போன்று கேமராவுக்கு முன்பு இருக்காமல் கேமராவுக்கு பின்னே இருக்க விரும்புகிறார். இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
Post a Comment