ஹைதராபாத்: முன்னாள் நடிகை ஜீவிதாவின் மூத்த மகள் ஷிவானி தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகை ஜீவிதாவை நினைவிருக்கிறதா 1980 மற்றும் 90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். தமிழ் தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். பின்னர் இது தான்டா போலீஸ் புகழ் நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். ராஜசேகர்-ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி(17), ஷிவாத்மிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அதில் ஷிவானி தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலகிருஷ்ணா நடித்த மித்ருடு பட இயக்குனர் மகாதேவ் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் ஷிவானி நடிப்பு மற்றும் நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறார். அது போக ஜிம்முக்கும் செல்கிறார்.
முன்னாள் நடிகை ராதா தனது மூத்த மகள் கார்த்திகாவை தெலுங்கு படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment