அமிதாப்பின் அரசியல் அதிரடி ‘சத்யாகிரஹா’ ஆரம்பம்

|

Amitabh Bachchan Starts Shooting Satyagraha

போபால்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் சத்யாகிரஹா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு போபால் நகரில் நேற்று தொடங்கியது. மகன் அமிதாப், மருமகள் ஐஸ்வர்யா, பேத்தி ஆரத்யா ஆகியோர் முதல்நாள் படப்பிடிப்புக்கு வந்து உற்சாகப்படுத்தினார்களாம்.

தமது அடுத்த படம் சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று அமிதாப் பச்சன் அடிக்கடி சொல்லிவந்தார். இப்போது அந்த எதிர்பார்ப்பிற்குரிய படமான சத்யாகிரஹா தொடங்கியுள்ளது. அரசியல் படமான இதில் வயதான கெட் அப் உடன் வருகிறார் அமிதாப். இந்த படத்தை பிரகாஷ் ஜா இயக்குகிறார்.

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அதுவும் ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இப்போது, அதே டைரக்டர்-ஹீரோ ஜோடி, சேர்ந்துள்ளனர். ‘சத்யாக்கிரஹா' என்ற பெயரோடு அரசியல் படம் எடுப்பதால், சர்ச்சைகள் எழப்போவது உறுதி! என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

சத்யாகிரஹா படத்தில் அமிதாப் தவிர அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Post a Comment