பவர் ஸ்டார் சீனிவாசனை எனக்கு யாரென்றே தெரியாது. அவருடன் நான் ஏன் நடிக்க வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.
சமீப நாட்களாக இந்த சீனிவாசன் தொல்லை தாங்கவில்லை எனும் அளவுக்கு மேடைகளில் அலப்பறை செய்து வருகிறார் பவர் ஸ்டார்.
இவரை சமீபத்தில் ஒன்பதுல குரு எனும் படத்தில் ஒரு பாடலுக்கு கையைக் காலை ஆட்டி காமெடி பண்ண அழைத்தனர்.
உடனே அதற்கு ஒரு தனி பிரஸ் மீட் வைத்த பவர், "ஒரு படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிராயைக் கேட்டிருந்தேன். அவரோ மறுத்துவிட்டார். இப்போது பாருங்கள் அதே லட்சுமி ராயுடன் ஜோடியாக ஆடுகிறேன்," என்று பெருமையாக அடித்துவிட்டார்.
இது உண்மையா என்று லட்சுமிராயிடம் கேட்டால், ரொம்ப கேவலமாக ஒரு லுக் விட்டுவிட்டு, 'பவர் ஸ்டாரா... அந்த ஆள் யார்னுகூட எனக்குத் தெரியாது. ஒரு நாள் ஒன்பதுல குரு ஷூட்டிங், ஒருத்தரைக் கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தினாங்க. அப்ப அவர் பேரைக்கூட நான் கவனிக்கல. அப்புறம்தான் அவர் பேர் சீனிவாசன்னாங்க. அவர் கூட நான் ஏன் டான்ஸ் ஆடப் போறேன்...", என்றார்.
Post a Comment