சென்னை: தனது தம்பி ஹீரோவாகும் வத்திக்குச்சி இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு வருமாறு இயக்குனர் முருகதாஸ் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.ஸைப் பார்த்து விஜய் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
இயக்குனர் முருகதாஸின் தயாரிப்பில் உருவாகும் படம் வத்திக்குச்சி. இதில் ஹீரோவாக அறிமுகமாகுபவர் முருகதாஸின் தம்பி திலீபன். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சிடியை வெளியிட்டார். விஜய் வருவது அறிந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கூட்டம் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விழாவில் பேசிய முருகதாஸ் கூறுகையில்,
இந்த படத்தில் என் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இசை வெளியீட்டு விழாவிற்கு வருமாறு விஜய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். தான் அனுப்பினேன். அதை மதித்து அவர் நிகழ்ச்சி வந்துள்ளார். அவர் நட்புக்கு மரியாதை கொடுப்பார் என்றார்.
இதையடுத்து விஜய் பேசியதாவது,
முருகதாஸ் போனில் தகவல் கொடுக்காமல் இருந்திருந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன் என்றார்.
Post a Comment