குஷ்புவை எடுத்துக்காட்டாக கூறி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்ற சோனா

|

Chennai Hc Exempts Sona From Appearing Before Court

சென்னை: ஆண்களை தரக்குறைவாக பேசியதாக நடிகை சோனா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்களை ஒரு டிஸ்யூ பேப்பர் போல செக்ஸுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடுவேன் என்று கவர்ச்சி நடிகை சோனா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சோனாவின் பேச்சு ஆண்களை இழிவுபடுத்துவது போன்று உள்ளது என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சோனாவுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு சோனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சோனா தரப்பில் வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், நடிகை குஷ்பு அளித்த பேட்டி தொடர்பாக பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சோனாவுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி சோனாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளித்தார்.

 

Post a Comment