திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஜொலிக்காமல் போகவே ஒரு சில படத்திலேயே விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டிய துரதிருஷ்டத்திற்கு தள்ளப்பட்டார்..
அப்புறம் அதுவும் செட் ஆகவில்லை. ஒரு பாடலுக்கு ஆடினார். சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊர் போன சாயாசிங் நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்டர் ஆனார். அங்கும் என்ன ஆனதோ தெரியவில்லை பாதியிலேயே சீரியலில் இருந்து கழன்று கொண்டார். தன்னுடன் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் சாயாசிங் சத்யம் ராஜசேகரின் 'வாலிபன்' படத்தில் மிக முக்கியமான அழுத்தமான ரோல் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். இவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கதிர்வேலன் காதலி' படத்திலும் செமத்தியான ரோல் என்கிறார்கள்.
எப்படியோ செகண்ட் இன்னிங்ஸ்லாவது சரியாக அமையுமா என்று பார்க்கலாம்.
Post a Comment