அங்காடித் தெரு நாயகன் மகேஷ் நடிக்கும் யாசகன்!!

|

Angadi Theru Mahesh Yasagan   

அங்காடித் தெரு படத்தில் அருமையாக நடித்திருந்தும் அடுத்து நல்ல வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மகேஷ், இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். பெயர் யாசகன்.

அகரம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக கே.கே.சந்தோஷ்பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை அமீர் மற்றும் சசிகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய துரைவாணன் இயக்குகிறார்.

கேரளாவைச் சேர்ந்த நிரஞ்சனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி, மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இணைத்து உருவாக்கப்பட்டு வரும், இந்த படத்திற்கு முன்பு ‘சித்தன்' என பெயிரிட்டிருந்தனர். தற்போது ‘யாசகன்' என மாற்றியுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் துரைவாணன் கூறுகையில், "இந்த வருடத்தின் மிகச்சிறந்த காதல் படமாக இது அமையும் என நம்புகிறேன்," என்றார்.

‘கனிமொழி', ‘லீலை' ஆகிய படங்களுக்கு இசையமைத்த சதீஷ் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். கே.வி.ஆனந்தின் உதவியாளர் பாபு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Post a Comment