சுந்தர் சி இயக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நயன்தாரா.
காதல் சர்ச்சைகள், அதிகரிக்கும் வயசு என பல விஷயங்களிருந்தாலும், இன்றைய இயக்குநர்கள் மத்தியில் நயன்தாராவை நடிக்க வைக்க ஏக போட்டி.
இப்போதுதான் நடிக்க வரும் இளம் ஹீரோக்கள் கூட நயன்தாரா வேண்டும் என்கிறார்களாம்.
தமிழில் இப்போதும் நம்பர் ஒன்னாகத் திகழும் நயன்தாராவை தனது அரண்மனை படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக சுந்தர் சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவர் நயன்தாராவுக்கு கதை சொல்லிவிட்டதாகவும் கூறினார்கள்.
ஆனால் இதையெல்லாமே நயன்தாரா மறுத்துவிட்டர். தான் சுந்தர் சியை சந்திக்கவே இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "சுந்தர்.சியிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை.
தமிழ் - தெலுங்கில் ஏற்கெனவே நிறைய படங்களை வைத்திருப்பதால், வேறு படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை.
இப்போதைக்கு தமிழில் நான்கு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறேன்," என்றார்.
Post a Comment