ஜெயா டிவியில் உதயமாகிறார் பெப்ஸி உமா!

|

Pepsi Uma Back With Jaya Tv

பெப்ஸி உங்கள் சாய்ஸ் வழங்கிய உமா ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மறுபிரவேசம் செய்துள்ளார்

சன் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி பெப்ஸி உங்கள் சாய்ஸ். 1993 சன் டிவி தொடங்கியதில் இருந்து 2008ல் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவது வரைக்கும் ஒரேநிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து சாதனை படைத்தவர் தொகுப்பாளினி உமா.

இன்றைக்கு நேரடியாக தொகுப்பாளர்களுடன் உரையாடி விரும்பிய பாடலை கேட்பது போல உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் உமா உடன் பேசி ( கடலை போட்டு விரும்பிய பாடலை கேட்பார்கள்)

சன் டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பெப்ஸி நிறுவனம் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் செய்தது. இதனாலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளினி உமாவின் முன் பெப்ஸி ஒட்டிக்கொண்டது.

நம்முடைய தகவல் இப்போது என்னவெனில் மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட பங்காளிச்சண்டையில் கலைஞர் டிவி உதயமானபோது சன் டிவியில் பணிபுரிந்து பல பணியாளர்கள் கலைஞர் டிவிக்கு சென்றனர். அதில் உமாவும் போனார். அங்குபோய் அதே உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியைத்தான் நடத்தினார். அப்புறம் கலைஞர் டிவிக்கு வந்தது தப்பு என்று உணர்ந்து கொஞ்சநாள் மீடியாவை விட்டே ஒதுங்கி இருந்தார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஜெயாடிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக களம் இறங்கியுள்ளார். நிகழ்ச்சியின் பெயர் ஆல்பம். பிரபலங்களின் வாழ்க்கையை, அவர்களின் சுவாரஸ்யப்பக்கங்களை திரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி இது. பிரபலங்களை பேட்டி காணப்போகிறார் உமா. விரைவில் இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகப் போகிறது.

 

Post a Comment