டெல்லி: பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான இந்த சல்மான் கானும், ஷாருக்கானும் எப்போது தான் தங்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பார்களோ தெரியவில்லை.
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கானுக்கும், ஷாருக்கானுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதாவது இடித்துக் காட்டி பேசுவது வழக்கமாகிவிட்டது. தற்போது சல்மான் கான் ஷாருக்கானை ஜாடைமாடையாக பேசியுள்ளார்.
அதாவது ஷாருக்கான் தன்னுடைய படம் ரிலீஸாகும் முன்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரப்படுத்துவார். இதற்காக மெனக்கெட்டு விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இது பற்றி தான் சல்லு தற்போது கமெண்ட் அடித்துள்ளார்.
சல்லு கூறுகையில், படங்களை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போதெல்லாம் படம் ரிலீஸாகும் முன்பு ஒன்றரை மாதத்தை இந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் தயாரிப்பாளர்கள் பல்வேறு பிராண்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். எனக்கு படத்தை விளம்பரப்படுத்துவதில் உடன்பாடில்லை, மகிழ்ச்சியும் இல்லை என்றார்.
இதற்கு ஷாருக் என்ன சொல்லவிருக்கிறாரோ?
Post a Comment