டெல்லி: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியை ராணி சோப்ரா என்றதில் தவறில்லை. அது தான் உண்மை என்று பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா பேசுகையில், யாஷ் சோப்ரா, பமீலா சோப்ரா, உதய் சோப்ரா, ராணி... நான் ஆதித்யா சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரைக் குறிப்பிட்டால் அது ஆதித்யாவையும் தானே குறிக்கும் என்றார்.
ராணி முகர்ஜிக்கும் மறைந்த யாஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்ய சோப்ராவுக்கும் கடந்த ஆண்டே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சத்ருகன் சின்ஹா பொது நிகழ்ச்சியில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார்.
இது குறித்து சத்ருகன் சின்ஹா கூறுகையில்,
நான் உண்மையைத் தான் கூறினேன். ஒன்று என்னை பொது நிகழ்ச்சியில் பேச அழைத்திருக்கக் கூடாது. இல்லை நான் வெளிப்படையாகப் பேசுவதை ஏற்க தயாராகிக்கொள்ள வேண்டும். யாஷ் சோப்ரா பற்றி என்னை பேச அழைத்தார்கள். அவரின் குடும்பத்தாரின் பெயர்களை குறிப்பிடுகையில் நான் ஆதித்ய சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி தெரிவித்தார். அதற்கு நான் ராணி சோப்ராவின் பெயரைக் கூறினால் அது ஆதித்யாவையும் குறிக்கும் என்றேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் கூறியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
Post a Comment