டாக்கா: வங்கதேசத்தில் இந்தி கார்டூன் சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் தாய்மொழியாக பெங்காலி மொழி உள்ளது. இதை கற்க சிறுவர்கள் கஷ்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த போது, டிவிக்களில் ஒளிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், பலர் இந்தியை கற்றுக் கொள்வதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஜப்பானின் டோரிமன் கார்டூன் நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்துள்ளது.
டோரிமன் என்பது ரோபோ பூனை. இது 22ம் நூற்றாண்டில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உதவுவது போல கார்ட்டூன் தொடராக ஒளிபரப்பப்பட்டு பிரபலமானது.
இதுகுறித்து வங்கதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசனுல் ஹக் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசுகையில், சிறுவர்கள் தவறான வழியில் செல்வதை அரசு விரும்பவில்லை. அவர்களுடைய கற்றல் சூழ்நிலைக்கு பாதிப்பு வரக்கூடாது என்றார்.
எனவே, டிஸ்னி, டிஸ்னி எக்ஸ்டி, போகோ போன்ற கார்டூன் சேனல்களை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலையும் இதுபோல தமிழ்பேசும் கார்டூன்களுக்கு தடை விதித்தால் நல்லது என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். நம் ஊரிலும் கார்டூன் சேனலுக்கு தடை வருமா?
Post a Comment