100-க்கும் மேற்பட்ட புகார்கள் தரப்பட்டதால், சில குழுக்களைத் திருப்திப் படுத்துபம் நோக்கில் ஆதிபகவன் படத்தின் பெயரை மாற்றியுள்ளேன். ஏ சான்றிதழ் பெறவும் ஒப்புக் கொண்டேன். ஆனால் இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் அளவுக்கு உள்ள படம் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
அமீரின் ஆதி பகவன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆதிபகவன் படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக கமிஷனர் அலுவலகம், முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக எனது ஆதிபகவன் படம் அமீரின் ஆதி - பகவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஏ சான்றிதழுடன் வெளியாகிறது.
ஆரோ 3 டி ஒலி தொழில்நுட்பத்தில், 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
சில குழுக்களைத் திருப்திப்படுத்த இந்தப் படம் ஏ சான்றிதழுடன் இப்போது வெளியாகிறது. ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தரமான கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment