சென்னை: சிறந்த இணையதள செய்தியாளருக்கான எடிசன் விருது ஒன்இந்தியா தமிழ் செய்தியாளர் டாக்டர் எஸ் சங்கருக்கு வழங்கப்பட்டது.
6வது எடிசன் விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வண்ணமயமாக நடந்தது. தமிழ் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் விக்ரம், பிரபு சாலமன், உதயநிதி, ஓவியா, தன்ஷிகா, ராதாரவி, ரோகினி, இமான், அனிருத், விஜய் சேதுபதி, வேல்முருகன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மலேசிய எம்பியும், இந்திய மலேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான சையது பின் காதிர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஒன் இந்தியா தமிழுக்கு...
பொதுவாக ஊடகத் துறைக்கு விருது வழங்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்ட சூழலில், எடிசன் விருது நிறுவனர் ஜெ செல்வகுமார் ஊடகத்துறையை ஊக்குவிப்பதற்காக சிறந்த செய்தியாளர்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறார்.
சிறந்த அச்சு ஊடக செய்தியாளர் விருது தினமலர் செய்யார் பாலுவுக்கு வழங்கப்பட்டது.
இருவருக்கும் இந்த விருதுகளை மலேசிய எம்பி முகமதி பின் காதிர் வழங்கினார். செய்தியாளர்களுக்கு விருது கொடுப்பது மிகுந்த நிறைவைத் தருவதாக அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டார்.
Post a Comment