மும்பை: தனக்கு கங்னம் ஸ்டைலை விட கொலவெறி பாடல் தான் பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் சோனம் கபூருடன் சேர்ந்து ராஜ்னாஹா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் வாரனாசியைச் சேர்ந்த பிராமணராக நடிக்கிறார். தனுஷின் நாயகி சோனம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்,
ஒய் திஸ் கொலவெறி பாட்டை தனுஷ் தான் எழுதியுள்ளார். அது அற்புதமாக உள்ளது. அண்மையில் கலக்கிய கங்னம் ஸ்டைலை விட எனக்கு கொலவெறி தான் பிடிக்கும். இந்த மாதிரி குப்பை பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
பாலிவுட்டில் புதுமுகமான தனுஷுடன் நடிப்பது பற்றி கேட்டதற்கு, இந்த ஆண்டு நான் பல புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளேன். இந்த படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று நம்புகிறேன் என்றார்.
ராஜ்னாஹாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment