மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர், காமெடியன், வசனகர்த்தா மற்றும் இயக்குனர் என பலமுகம் கொண்ட காதர் கான் இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி பரவியது.
ட்விட்டரில் யாரோ ஒருவர், பழம்பெரும் பாலிவுட் நடிகர், காமெடியன், வசனகர்த்தா மற்றும் இயக்குனர் காதர் கான் இன்று மரணம் அடைந்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று நேற்று தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த பலரும் காதர் கானின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ட்விட்டரில் தெரிவித்தனர்.
மேலும் ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் காதர் கானுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் காதர் கான் நலமாக உள்ளார் என்று பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் சிஇஓ தனுஜ் கார்க் தெரிவித்தார்.
இதையடுத்து தான் யாரோ வேண்டும் என்றே வததந்தியைப் பரப்பியது தெரிய வந்தது.
77 வயதாகும் காதர் கான் கூலி, ஷராபி போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் ஆன்கேன் மற்றும் ஹீரோ நம்பர் 1 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் இறந்துவிட்டதாக விஷமிகள் ட்விட்டரில் வதந்தியைக் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருவது இது முதல் முறை அன்று.
Post a Comment