காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்!

|

Santhya Be Paired With Santhanam Power Star

சென்னை: காதல் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகமாகி, நடிக்கத் தெரிந்தவர் என்ற நல்ல பெயரையும் பெற்று, நடுவில் காணாமல் போன சந்தியா, இப்போது காமெடியன் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

காதல் படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்த சந்தியா, திடீரென வாய்ப்புகளின்றி தவித்தார்.

வேறு வழியின்றி தாய்மொழியான மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வர முயன்றார். ஆனால் தமிழில் கிடைத்த முக்கியத்துவம் அங்கு கிடைக்கவில்லை.

நிறைய தமிழ்ப் படங்களில் தோழி, குணச்சித்திர வேடங்களுக்கு சந்தியாவை அழைத்தனர். அவர் மறுத்து வந்தார்.

ஆனால் இப்போது வேறு வழியின்றி, ‘யா யா’ என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அது… காமெடியன் சந்தானத்துக்கு ஜோடி!

அதுமட்டுமல்ல… இந்தப் படத்தில் சந்தானத்தையும், அவர் ஜோடி சந்தியாவையும் நக்கலடிக்கும் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார். நடுநடுவே அவரும் கிட்டத்தட்ட ஜோடி எனும் அளவுக்கு தொட்டுக் கொள்வாராம் சந்தியாவை.

ஆரம்பத்தில் இந்த வேடத்தில் நடிப்பதா என்ற மனப்போராட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்பதால் ஒப்புக் கொண்டேன், என்கிறார் சந்தியா.

 

Post a Comment