படப்பிடிப்பின்போது நான் கடலில் மூழ்கியதாகவும், யாரோ காப்பாற்றியதாவும் வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. கடல் என்னை பத்திரமாகவே பார்த்துக் கொண்டது என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் - பார்வதி, அப்புக்குட்டி நடிக்கும் படம் மரியான். இந்தப் படத்தில் மீனவராக நடிக்கிறார். படப்பிடிப்பு குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் நடித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் கடலில் படப்பிடிப்பு நடந்த போது தனுஷும் அப்புக்குட்டியும் கடலுக்குள் மூழ்கிவிட்டதாகவும், படக்குழுவினர் காப்பாற்றியதாகவும் செய்தி வந்தது.
ஆனால் இப்போது அவை அனைத்தும் கற்பனைக் கதை என்று தெளிவாக்கியுள்ளார் தனுஷ்.
தனுஷ் இதுகுறித்து கூறுதையில், "கடலில் படப்பிடிப்பு நடந்தது உண்மைதான். ஆனால் படகு கவிழவில்லை. படப்பிடிப்பு சிறப்பாக நடந்தது. என்னை கடல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது.
இப்படி வந்த செய்திக்காக நான் கோபப்படவில்லை. இதெல்லாம் சகஜம் என்பது எனக்கும் தெரியும்," என்றார்.
நல்ல மெச்சூரிட்டிதான்!
Post a Comment