விண் தொலைக்காட்சியில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
காதல் திருமணம் செய்த பிறகு காதல் உணர்வுகளுடன் வாழ்வது கணவனா, மனைவியா, என்ற தலைப்பில் சுவையான விவாதம் நடைபெற உள்ளது.
இதற்கான பட ஒளிப்பதிவு வரும் ஞாயிறு ( 10.02.13) மாலை 4 மணிக்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ராமன் வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலைஞர் தொலைக்காட்சியின் முதுநிலை மேலாளர் ஃப்ளாரண்ட் பெரோரா, நீதியின் குரல் சி.ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக விண் தொலைக்காட்சி நிறுவனர் தி. தேவநாதன், எழுத்தாளர் லியாகத் அலிகான், திரைப்பட இயக்குநர், நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த பட்டிமன்றத்திற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஸ் நடுவராக செயல்பட்டு தீர்ப்பு வழங்குகிறார்.
‘கணவனே' என்ற தலைப்பில் வி.ராமலிங்கம், கே.ஜெயமணி, பிரித்தா, ஆர்.விஜயபோஸ், ப.செந்தில்குமார், ஆகியோர் பேச உள்ளனர்.
‘மனைவியே' என்ற தலைப்பில் புதிய தலைமுறை தன.சிவசங்கரன், இயக்குநர் பாரதி மோகன், பேராசிரியை வள்ளி, கவிஞர் மணிவேந்தன், ஸ்ரீராம் ஆகியோர் பேசுகின்றனர்.
இந்த பட்டிமன்றம் விண் டிவியில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று இரவு 8மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment