ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஹீரோவானார் ஸ்ரீ!

|

Shri Plays Lead Role Mysskin Movie

மிஷ்கின் இயக்க, இளையராஜா இசையில் உருவாகும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் வழக்கு எண் 18/9-ல் நடித்த ஸ்ரீ.

மிஷ்கினின் லோன் வுல்ப் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில், மிஷ்கின் அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரபஞ்சன் கூறுகையில், "இப்படத்தின் விளம்பரத்தை போலவே தலைப்பும் மிகவும் வித்தியாசமானது. படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை கூட்டுவதோடு, ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இந்தப் படம் பிரபலமாகிவிட்டது மிஷ்கின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பைக் காட்டுகிறது," என்றார்.

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அடுத்து நடிக்கும் படம் இதுதான்.

இந்த வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "நான் கொடுத்து வைத்தவன்... முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணிபுரிவது என் பாக்கியமே. என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமானவையாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் நிறையவே கற்று வருகிறேன்," என்றார்.

 

Post a Comment